எத்தனை விதமாய்.....
பல்லவி
எத்தனை விதமாய் நீ காட்சி தந்தாலும்
அத்தனையும் ராமா கண்டு மனம் களிக்குதே
அனுபல்லவி
இத்தனை போற்றிப் புகழ்ந்துனைத் துதித்தபின்னும்
மெத்தனமேன் உனக்கு எந்தனைக் காத்தருள
சரணம்
சித்தத்திலுந்தன் திருவடியே நினைந்து
நித்தமும் உன் திருநாமமே துதித்தேன்
சத்தியமூர்த்தியே கேசவனே ஶ்ரீராமா
உத்தமி சீதையின் மனங்கவர் நாயகனே
யுத்தத்தில் ராவணனை வென்ற ஜெயராமன்
வித்தகர் வியந்தேத்தும் கோதண்டராமன்
இத்தரை மாந்தர் பணியும் கோசலராமன்
முத்தமிழ் கவி போற்றும் பட்டாபிராமன்
No comments:
Post a Comment