வேங்கடரமணனை....
பல்லவி
வேங்கடரமணனை ஶ்ரீ பாலாஜியை
பாங்குடனே துதித்துப் பரவசமெய்தினேன்
அனுபல்லவி
நீங்காத செல்வமும் நிறைவான வாழ்வும்
தீங்கின்றி எனக்களிக்கும் பத்மாவதி போற்றும்
சரணம்
ஓங்கி உலகளந்த வாமனனைக் கேசவனை
பூங்குழலாள் திருமகளைத் திருமார்பில் தாங்கி
தூங்காமல் தூங்கும் பாற்கடல் வாசனை
ஓங்கு புகழ் மிகு கோமந்தகத் திருப்பதியில்
No comments:
Post a Comment