என்னைக் காக்க.......
பல்லவி
என்னைக் காக்க உனக்கு இன்னும் தயக்கமேன்
அன்னை தந்தை குருவும் நீயென்றே நினைக்கும்
அனுபல்லவி
உன்னைத் தவிர வேறு தெய்வம் எனக்கு இல்லை
சென்ன கேசவா ஓ ராகவா
சரணம்
உன்னைத் துதித்த கரிக்கும் காரிகைக்கும்
முன்னம் நீ அபயம் தரவில்லையா
பன்னக சயனனே பரிபூரணனே
தன்னிகரில்லாத தீன தயாகரனே
மன்மதனும் நான்முகனும் தந்தையெனத் துதிக்கும்
இன்னமுதே ராகவனே கோசலை மைந்தனே
சொன்னசொல் காக்கும் அயோத்தியின் அதிபதியே
உன்னருள் வேண்டியே திருவடி பணிந்தேன்
No comments:
Post a Comment