திங்கள் ......
பல்லவி
திங்கள் திருமுகத்தாள் திருமகளின் பதம் பணிந்தேன்
மங்களம் தந்தருள வேண்டுமெனத் துதித்து
அனுபல்லவி
சங்கும் சக்கரமும் கையிலேந்தும் கேசவனின்
பங்கய மலர் மார்பை அலங்கரிக்கும் ஶ்ரீதேவி
சரணம்
எங்கும் நிறைந்திருக்கும் பங்கயச்செல்வி
தங்கும் பொருளளிக்கும் செங்கமலவல்லி
தங்கப் பட்டாடையுடன் தகதகக்கும் அழகுடைய
மங்காத புகழ் மேவும் சிங்கார வடிவுடையாள்
அங்கமில் மன்மதனை அளித்த பெருந்தாயார்
சங்கப் புலவர்களின் கவித்திறனை சோதிக்கும்
அங்க சௌந்தர்யம் படைத்த பேரழகி
சங்கரன் பங்கிலுறை சங்கரியின் தோழி
No comments:
Post a Comment