அனைத்தும் நீயே.......
பல்லவி
அனைத்தும் நீயே ஶ்ரீரகு ராமா
உனையே துதித்தேன் ஶ்ரீஜெய ராமா
அனுபல்லவி
வினைப்பயன் பவபயம் களைபவன் நீயே
தினகர குலத்தோனே கேசவா மாதவா
சரணம்
அனங்கனையும் பிரமனையும் திசைகளையும் படைத்தவனே
முனிவரும் தேவரும் வணங்கிடும் ரகுவரனே
தனிப்பெருங்கடவுளே தசரதராமனே
வினதையின் புதல்வனை வாகனமாய்க் கொண்டவனே
தரணிதரனே தாமரைநாபனே
அரன் மனத்திடை சதா துதித்திடும் தேவனே
முரளிதரன் நீயே கோசல பாலனே
சரணடைந்தேன் எனையே காத்தருள்வாயே
No comments:
Post a Comment