வேங்கடகிருஷ்ணன்
பல்லவி
பரமதயாளனைப் பார்த்தசாரதியை
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
அரவக்கொடியோன் பார்த்தனுக்குதவிய
நரநாராயணனை கண்ணனைக் கேசவனை
சரணம்
கரங்களில் சங்கும் சாட்டையுமேந்தி
வரம்தரும் கரத்துடன் பக்தருக்கு காட்சி தரும்
பரந்தாமனை வேங்கடகிருஷ்ணனை
அரவணைத்தெனையே ஆட்கொள்ள வேண்டுமென
No comments:
Post a Comment