ஜனார்த்தனன்
பல்லவி
ஜனார்த்தனா உந்தன் மலர்த்தாள் பணிந்தேன்
அனாதன் எனையே ஆண்டருள்வாயே
அனுபல்லவி
சனாதன தர்ம பரிபாலனனே
கனாவிலும் உனைக் கணமும் மறவேன்
சரணம்
வினோத லீலைகள் புரிந்திடும் மாலனே
நந்தகுமாரனே யசோதை பாலனே
கேசவ மாதவ முரளீதரனே
கோகுலபாலா யதுகுல திலகா
No comments:
Post a Comment