ஆதிகேசவா
பல்லவி
ஆனந்தமானவனே ஆதிகேசவா
ஏனிந்தப் பாராமுகம் ஏழையென்மீது
அனுபல்லவி
வானுறை இந்திரனும் சுகசனகாதியரும்
கானுறை முனிவரும் அனுதினம் பணிந்திடும்
சரணம்
தேனந்தத்திருநாமம் தினமுரைத்தேனே
கோனுந்தன் திருப்பாதம் தினம் துதித்தேனே
தானந்தமில்லாத தீனசரண்யனே
வானும் புவியுமளந்த வாமனனே
No comments:
Post a Comment