சௌரிராஜன்
பல்லவி
கண்ணபுரத்தானை சௌரிராஜனை
கண்ணாரக்கண்டு மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
கண்ணபுரநாயகி உடனிருந்து போற்றும்
கண்ணனைக்கேசவனை நீலமேகப்பெருமாளை
சரணம்
வண்ணமுடன் வரம் தரும் கரம்தனைக் காட்டி
திண்ணமுடன் மறுகையில் சக்கரத்தை ஏந்தி
மண்ணுண்டவாயன் குழற்கற்றை தாங்கி
கண்ணெதிரே அழகுடனே எழுந்தருளிக் காட்சிதரும்
No comments:
Post a Comment