சாரதி
பல்லவி
சாரதி உனையே சரணடைந்தேன்
காரணப்பெயர் கொண்ட நாரணனே பார்த்த
அனுபல்லவி
நாரதர் நான்முகன் நரர்சுரர் இந்திரன்
சுகசனதாதியர் அனைவரும் போற்றும்
சரணம்
சூரிய சந்திரர் ஒளியையும் மிஞ்சும்
பேரொளி படைத்த கார்வண்ணக்கண்ணனே
மாரனும் நாணும் பேரெழில் வண்ணனே
பார் புகழ் ஆழ்வார்கள் பாடிப்பரவிய
No comments:
Post a Comment