Wednesday, 26 March 2014

கபாலீச்வரன்










கபாலீச்வரன் 

பல்லவி 

செம்பொன் மேனியனை  சிதம்பரனாதனை 

எம்பெருமான் சிவனை மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

அம்புய நாபன் கேசவன் நேசனை 

சம்பு கபாலியை சாம்பசதாசிவனை 

சரணம் 

உம்பர் முனிவர் பணி தேவாதிதேவனை 

அம்பிகை மனங்கவர் ஆலாலகண்டனை 

வெம்பவக்கடலினைக் கடந்திட உதவிடும் 

அம்பலவாணனைக் கயிலை நாதனை 



































கபாலீசன்


கபாலீசன் 

பல்லவி 

பார்வதி பதியை பரமேச்வரனை 

 மகாதேவனை  மனமாரத்துதித்தேன் 

துரிதம் 

நீரும் நெருப்பும் நிலமும் காற்றும் 

                                              நீள்விசும்புமாகிய சிவனை


அனுபல்லவி 


கார்வண்ண மேனியன் கேசவன் நேசனை 

பார் போற்றும் ஈசனை வார்சடையோனை 


சரணம் 

காரமர் மேனியன் கணபதியும் முருகனும் 

நாரணனும் நான்முகனும் தேவரும் முனிவரும் 

சூரியனும் சந்திரனும் நந்தியும் கணங்களும் 

நேர் நின்று வணங்கிடும் கபாலீசனை 





ஸ்ரீவித்யா ராஜகோபாலன்





ஸ்ரீவித்யா  ராஜகோபாலன் 


பல்லவி 

ஸ்ரீ வித்யா  ராஜகோபாலனை 

மன்னார்  குடித்தலத்தில் மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

ஆவினங்கள்  மேய்ப்பவனை அநாதநாதனை 

பூவிதழ்கள் தூவி மலர்ப்பதம் பணிந்து 

சரணம் 

தேவி  செங்கமலம் மனங்கவர் நாயகனை 

தேவரும் முனிவரும் நாரதரும் நான்முகனும் 

மாவிடைவாகனனும்  கருடனுமிந்திரனும் 

யாவரும் பணிந்தேத்தும் தேவாதி தேவனை 















Tuesday, 25 March 2014

கேசவன் நாமசங்கீர்த்தனம்

                               


                                   கேசவன்  நாமசங்கீர்த்தனம்

                                      பல்லவி

                                  கேசவன் நாமமே கேட்கவே  பேரின்பம் 

                                   ஆசையுடன் துதித்து பாசமுடன் பாடும்

                                        அனுபல்லவி

                                    நீசருக்குமருள் தரும் நேசமுடையவன்

                                     ஈசன் சிவபெருமான் பூசிக்கும் பதத்தினன்

                                           சரணம்

                                     ஆசாபாசத் தளைகளைக் களைந்திடும்

                                      மோசமான  எண்ணங்கள் போக்கிடும்

                                       தேசுடன் திகழும் லாவண்யமளித்திடும்

                                        பேசும் தெய்வம்  கலியுக வரதன்


                                     
















துதிக்கையன்


துதிக்கையன்

பல்லவி

மதியணிந்தவனை மதவாரணனை

துதிக்கையனை கதியெனத்துதித்தேன்

அனுபல்லவி

கதிரொளியையும்விட ஒளிபடைத்தவனை

பதுமநாபன் கேசவன் மருகனை

சரணம்

முதன் முதலனைவரும் வணங்கிடும் தேவனை

மதுரம் நிறைந்த மோதகப்பிரியனை

எதிரிடுமிடர்களை விலக்கிடும் கரிமுகனை

விதியையும் மாற்றும் வலியுடையவனை

துரிதம்

நந்தியும் கணங்களும் நரர்சுரர் முனிவரும்

இந்த்ரனும் பிரமனும் கரம் பணிந்தேத்தும்




ஆனந்தவல்லி


ஆனந்தவல்லி

பல்லவி

ஆனந்தவல்லியை மனமாரத்துதித்தேன்
பிரம்மநகரேச்வரன் மனங்கவர் நாயகி

அனுபல்லவி

ஞானமும் கல்வியும் செல்வமுமளித்திடும்
தேனார்மொழியாள் கேசவன் சோதரி

சரணம்

வானுறை தேவரும் முனிவரும் பிரமனும்
ஆனைமுகத்தோனும் முருகனும் வணங்கிடும்
ஞானாம்பிகையை பரமேச்வரியை
தீனருக்கருளும் திரிபுரசுந்தரியை





Monday, 24 March 2014

பத்மநாபன்





பத்மநாபன்

பல்லவி

தாமரைத்திருவடியைத் தஞ்சமடைந்தேன்
மாமறைகள் போற்றும் கேசவனே உந்தன்

அனுபல்லவி

கோமளவல்லியைத்திருமார்பில் வைத்திருக்கும்
தாமோதரனே ஆராவமுதே நின்

சரணம்

வாமனனாயன்று மூவடியாலுலகளந்த
தாமரை நாபனே நீலவண்ணனே
காமக்ரோதாதி அறுபகையகலவும்
தாமதமின்றியே பரகதி பெறவுமுன்