Wednesday, 2 April 2014
மறத்தமிழன்
மறத்தமிழன்
நானுமோர் மறத்தமிழனே !
ராஜபக்சேயின் நண்பனல்ல;
நியாயங்கள் தெளிவாக
நாளாகலாம் காத்திருப்போம்
கடவுள் வழங்கும் தண்டனைகள் நம் கண்ணுக்குப்புலப்படவேண்டுமெனக்
கட்டாயமில்லை ! ஆங்காரப்பேச்சுக்களா ல் லாபமில்லை !
ஆக்கபூர்வமாகஏதாவது செய்வோம் ; துணை வாருங்கள்!
.தமிழ் எனது உயிர் மூச்சு
அதை நான் பிறார் மீது விடுவதில்லை !
தமிழனென்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா !
இது எனது அன்புக்கவியின் அறைகூவல்!
Tuesday, 1 April 2014
ஆதிவிநாயகன்
ஆதிவிநாயகன்
பல்லவி
மனம் களிக்கச் செய்யும் மகாகணபதியை
மதிசேகரன் மகனை மனமாரத்துதிதேன்
அனுபல்லவி
தினகரகுலத்தோன் கேசவன் மருகனை
வினைகளையகற்றிடும் வேழமுகத்தோனை
சரணம்
வினயமுடன் பணியும் அடியவர்க்கெல்லாம்
அனைத்துமளித்திடும் ஆனைமுகத்தோனை
தனக்கு சரிநிகரில்லாத தேவனை
அனைத்துக்கும் முதலான ஆதிவினாயகனை
முனிவரும் தேவரும் கணங்களும் நந்தியும்
சனிமுதல் கோள்களும் பிரமனும் வணங்கிடும்
இனிய சங்கீத நாட்டிய ரசிகனை
கனிவுடனெனையே ஆண்டருள வேண்டுமென
கண்ணனும் ஏசுவும்
கண்ணனும் ஏசுவும்
வண்ண வண்ண பூக்கள்
கண்ணைப்பறிக்கும் அழகு
எண்ணங்களில் கள்ளம்
கருப்பு வெள்ளை பேதம்
எதுவமில்லை இங்கு
கண்ணனும் ஏசுவும் கை
கோர்த்து நிற்கும் அழகு
விண்ணும் மண்ணும் காண
வியப்பூட்டும் அழகு
சிறகடித்து ப்பறக்க
காத்திருக்கும் அழகு
ஸ்ரீ பெரிய நாயக கணபதி
.
.
ஸ்ரீ பெரிய நாயக கணபதி
பல்லவி
அகவல் பாடிய ஔவைக்கருளிய
ஸ்ரீ பெரியநாயக கணபதியைப்பணிந்தேன்
அனுபல்லவி
சகமெலாம் புகழும் கேசவன் மருகனை
பகலவனைவிட ஒளிதரும் கரிமுகனை
சரணம்
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவனை
அகிலம் காக்கும் ஆனைமுகத்தோனை
சகலரும் வணங்கிடும் சங்கரி மைந்தனை
புகழ்மிகு கோவலூர் திருத்தலத்தில் காட்சி தரும்
Subscribe to:
Posts (Atom)






