நெய் வடிவான …..
பல்லவி
நெய் வடிவான வடக்குநாதனை
மெய்ப்பொருளை சிவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
நெய் வெண்ணை விரும்பி உண்ணும் கேசவன் நேசனை
மெய்யனை மறை போற்றும் நமச்சிவாயனை
சரணம்
தையல் பார்வதியின் மனங்கவர் நாயகனை
அய்யனை அப்பனை ஆதி தேவனை
பொய்யான உலகில் எனைக்காக்குமீசனை
கை கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி வேண்டியே
No comments:
Post a Comment