உந்தன் தயவில்லையாகில்…..
பல்லவி
உந்தன் தயவில்லையாகில் என் செய்வேன் தாயே
சந்ததம் உனைப்போற்றிப் பாடுமெந்தனுக்கு
அனுபல்லவி
உந்தி கமலன் கேசவன் சோதரியே
எந்தை ஈசன் சிவபெருமான் நாயகியே
சரணம்
கந்தனுக்கு வேல் தந்த வேல்நெடுங்கண்ணியே
மந்திரப்பொருள் நீயே அருமறையும் நீயே
வந்திப்பவர்க்கருளும் திரிபுரசுந்தரியே
இந்திராதி தேவர்கள் துதித்திடுமீச்வரியே
சந்திரனின் பிறையணிந்த அந்தரியே உமையே
சுந்தர வடிவுடைய சுகபாணி கல்யாணியே
விந்தைகள் பல புரிந்த அகிலாண்டேச்வரியே
சிந்தை கவர்ந்தவளே ஶ்ரீலலிதாம்பிகையே
No comments:
Post a Comment