பார்த்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
வளி வெளியாய்…..
பல்லவி
வளி வெளியாய் காற்றாய் நீராய் நிலனாய் அனலாய் நிற்கும்
ஒளி மிகு நாராயணனைக் கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
பளிங்கு போலோடும் நதியிலும் அதில் மிதக்கும் பாறைகளிலும்
விளங்கும் இறைவனை இயற்கையைப் போற்றி
சரணம்
களிநடம் புரியும் அழகிய நாட்டிய மங்கை போல்
நெளிவுடன் ஓடும் நீரின் அழகும்
நளினமும்
ஒளி பிரதிபலிக்கும் பொலிவும் கண்டென்
உளம் குளிர்நதேன் பரவசமடைந்தேன்🙏
No comments:
Post a Comment