அஞ்சுமுக சிவன்
பல்லவி
அஞ்சுமுக சிவனை தஞ்சமடைந்தேன்
சஞ்சலம் பவபயம் தீர்த்தெனையாண்டருள
அனுபல்லவி
பஞ்சாட்சரமெனும் பெயருடையானை
செஞ்சடாதரனை கயிலாயவாசனை
சரணம்
நஞ்சுண்ட கண்டனை நமச்சிவாயனை
நஞ்சரவணிந்தவனை நடன சபேசனை
கஞ்சனைக்காய்ந்த கேசவன் நேசனை
பஞ்சபாணப் பயிரவியின் நாயகனை
No comments:
Post a Comment