சிவராமன்
பல்லவி
சிவதனுசை முறித்து சீதையை மணந்த
சிவராமன் திருவடியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
தவமுனி சொல்கேட்டு கவனமுடன் எழுந்து
உவகையுடன் சென்று சபைநடுவே நின்று
சரணம்
தவம் செயும் முனிவரும் வானுறை தேவரும்
அவனியோரனவரும் மகிழ்வுடன் காண
குவலயம் போற்றும் ரகுகுலம் கொண்டாடும்
நவநிதியாம் கேசவன் தீயெனப்பொங்கி
No comments:
Post a Comment