கரிமுகன் (1)
பல்லவி
கரிமுகனே உந்தன் கழலடி பணிந்தேன்
பரிவுடன் எனக்கருள வேண்டுமெனத்துதித்து
அனுபல்லவி
அரியயனரனும் நந்தியும் கணங்களும்
நரர் சுரர் முனிவரும் கரம்பணிந்தேத்தும்
சரணம்
எரிதழல் நெற்றியில் வைத்திருக்கும் முக்கண்ணன்
விரிசடையோன் சிவன் கொஞ்சிடும் மைந்தனே
நெறியுடன் எந்தன் காரியம் நடைபெற
கரிசனத்துடன் நீ கடைக்கண்ணருள் தரவே
பரிமுக க்கடவுள் கேசவன் மருகனே
பொரியவல் அப்பமும் தித்திக்கும் மோதகமும்
எருக்க மாலையும் அருகம் பில்லும்
விரும்பி ஏற்றிடும் விக்னேஸ்வரனே
No comments:
Post a Comment