வளைக்கரத்தாள்
பல்லவிஅருள்தரும் அம்பிகையை கருநிறத்தவளை
கருணைக்கடலை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
வருணனைக்கெட்டாத பெருமை நிறைந்தவளை
திருமகளைக் கலைமகளை நேசிப்பவளை
சரணம்
திருமால் கேசவன் சோதரியை உமையவளை
தருமநெறி காப்பவளை வளைகளணிந்தவளை
வருந்துயர் களைபவளை சிவனிடம் கொண்டவளை
திருச்சக்கரம் தன்னில் வீற்றிருப்பவளை
திருவிளக்கின் ஒளியாய்ச்சுடராயிருப்பவளை
பருத்த முலைகளை உடையவளைத் தூயவளை
நெருப்பாய் நீராய் நிலனாய் காற்றாய்
பெருவெளியாய் இருப்பவளை அனைத்திலும் பெரியவளை
No comments:
Post a Comment