ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
பல்லவி
உன்னை வர்ணிக்க வார்த்தைகளேது
அன்னையே ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
புன்னை மரத்தடியே குழலூதி நிற்கும்
பன்னகசயனன் கேசவன் சோதரி
சரணம்
இரு நான்கிதழும் பதினாறிதழும் திகழ்
தாமரை மலரும் மூவட்ட முக்கோடும்
நாலுடன் நாற்பது கோணங்களுமுடைய
திருச்சக்கரம்தன்னில் வீற்றிருக்கும்
No comments:
Post a Comment