நித்தம் ஒரு புதுப்பாடல்…..
பல்லவி
நித்தம் ஒரு புதுப்பாடல் உனைப்போற்றி நான் பாட
உத்தமனே கேசவனே நீயனக்கு அருள்வாய்
அனுபல்லவி
பத்து தலை ராவணனின் கதை முடித்த ராகவனே
வித்தகர் ஞானியர் போற்றும் சத்தியமூர்த்தியே
சரணம்
உத்தமி திருமகளைத் தன் மார்பில் சுமப்பவனே
நித்திலத்தொத்தெனும் நாமம் உடையவனே
கத்தும் கடலலை மீதுறங்கும் திருமாலே
சித்தத்தில் வைத்து நான் துதிக்கும் நாராயணனே
No comments:
Post a Comment