கற்பனைக்கெட்டாத…..
பல்லவி
கற்பனைக்கெட்டாத அழகுடைய
கற்பக விநாயகனை தினம் துதித்தேன்
அனுபல்லவி
சிற்பரன் சிவன் மகனைக் கேசவன் மருகனை
மற்பொருள் திரள் புய ஆனைமுகத்தோனை
சரணம்
சொற்களால் வர்ணிக்க இயலாத வடிவுடைய
அற்புத உருவம் கொண்ட மகாகணபதியை
பற்பல கருமங்கள் விகற்பமின்றி நடைபெற
விற்பன்னர் வேதியர் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment