மாதங்கி காளி…..
பல்லவி
மாதங்கி காளி மகிஷாசுரமர்த்தனி
நீதான் எனக்கருள வேண்டுமெனத் துதித்தேன்
அனுபல்லவி
மாதவன் கேசவன் நேசிக்கும் சோதரி
நூதன அலங்காரம் பல புனைந்தவளே
சரணம்
வேதனை வினை தீர்க்கும் வெக்காளியம்மன் நீ
சீதளம் தரும் சமயபுரத்தாளும் நீயே
மாதுளம் பூ நிறத்தாளே மதுர காளியும் நீயே
சீதளா தேவியே ராஜராஜேச்வரியே
ஏதமிலாதவளே தாயே மதுரை மீனாக்ஷியே
கீதமியற்றியே உன் புகழ் பாடினேன்
சாதோதரி சாகம்பரி சங்கரியே கௌரி
பூதலம் போற்றும் ஶ்ரீலலிதாம்பிகையே
No comments:
Post a Comment