பார்த்தசாரதி
பல்லவி
பார்த்தசாரதியின் பாதம் பணிந்தேன் (ஶ்ரீ)
கீர்த்தி மிகு திருவல்லிக்கேணியெனும் தலத்தில்
அனுபல்லவி
வார்த்தையிலடங்காத சௌந்தர்யம் நிறைந்தவன்
பார்த்தவர் மனங்கவரும் பேரழகன் கேசவன்
சரணம்
பார்த்தனுக்குத் தேர் நடத்தி பஞ்சவர்க்குதவிய
கார்வண்ணன் கண்ணன் கமலநாபன்
நாற்கவியும் புகழும் வேங்கடகிருஷ்ணன்
பாற்கடலில் பள்ளி கொண்ட ஶ்ரீமன் நாராயணன்
No comments:
Post a Comment