ஏதாவது பாடென்றாய்…..
பல்லவி
ஏதாவது பாடென்றாய் கேசவா
மாதவா என்ன பாடுவதென்று நீயே சொல்
அனுபல்லவி
யாதவனே கண்ணனே நந்தகுமாரா
கீதையை ஓதிய ஶ்ரீவாசுதேவா
சரணம்
வேதங்களுனைப் புகழுவதைப் பாடவா
பூதலமுண்டுமிழ்ந்த லீலையைப் பாடவா
ஆதவ குலத்துதித்து ராமானாய் நீ செய்த
சாதனைகளப் போற்றிப் பாடவா
பேதமில்லாமல் கோபியருடனாடிய
கீதகோவிந்தத்தைப் பாடவா
பூதனையை நீயழித்த சம்பவத்தைப் பாடவா
வேத வியாசரோதிய பாரதக்கதையைப்பாடவா
No comments:
Post a Comment