எத்தனை தான் …..
பல்லவி
எத்தனை தான் உனைப்போற்றிப் பாடினாலும்
சித்தம் இரங்காத தேனோ முருகையா
அனுபல்லவி
பித்தன் சிவன் மகனே கேசவன் மருகோனே
முத்தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவனே
சரணம்
வித்தகர் வேதியர் போற்றும் தத்துவப்பொருளே
உத்தமி உமையாளிடம் வேல் பெற்ற வேலவனே
முத்துக்குமரனே மூவாசைப் பிணி போக்கும்
நித்திலமே நீலமயில் வாகனனே
No comments:
Post a Comment