பெரிய புராண நாயகன்……
பல்லவி
பெரிய புராண நாயகன் சிவனை
பரிவுடன் போற்றிப் பாடித்துதித்தேன்
அனுபல்லவி
எரிதழலேந்திய முக்கண்ணனை ஈசனை
கரியுரி அரவணிந்த கேசவன் நேசனை
சரணம்
நரியைப்பரியாக்கிய நாகநாதனை
விரிசடையில் கங்கையை ஏந்திய திரிபுராந்தகனை
அரியயனறியாத அடிமுடியுடையவனை
மரித்தலும் பிறத்தலுமில்லாதவனை
No comments:
Post a Comment