யத்ராஸ்தி போகோ ந ச தத்ர மோக்ஷ:
யத்ராஸ்தி மோக்ஷோ ந ச போக: |
ஶ்ரீ ஸுந்தரீ ஸாதக புங்கவானாம் போகஸ்ச
மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ
எங்கே போகமுள்ளதோ அங்கே மோக்ஷமில்லை!! எங்கே மோக்ஷமுள்ளதோ அங்கே போகமில்லை!! ஆனால் "ஸ்ரீ ஸுந்தரீ" எனும் லலிதா மஹா த்ரிபுரஸுந்தரீயான அம்பாளை உபாஸிக்கும் ஸ்ரீ வித்யோபாஸகனுக்கு போகமும் மோக்ஷமும் ஒருசேர்ந்து அனுக்ரஹிக்கிறாள் பரதேவதை!!
ஜய ஜகதம்ப ஸிவே
ஜய ஜய காமாக்ஷி!!
போகத்தைத் தரும் மார்க்கங்கள் மோக்ஷத்தைத் தருவதில்லை. மோக்ஷத்தைத் தரும் இதர யோகாதி மார்க்கங்கள் போகத்தைத் தருவதில்லை.
போகமும் மோட்சமும்…..
பல்லவி
போகமும் மோட்சமும் இரண்டுமே தருவாள்
ஆகம வேதகலாமய சுந்தரி
அனுபல்லவி
தேகளீசப் பெருமாள் கேசவன் சோதரி
மூகசங்கரர் துதித்த ஈச்வரி
சரணம்
போகமுள்ள இடத்தில் மோக்ஷமில்லை பக்தி
யோகமுள்ள இடத்தில் போகமில்லை
சாகசம் நிறைந்த ஶ்ரீலலிதம்பிகையை
வேகமுடன் உபாசிக்கும் தூய பக்தனுக்கு
No comments:
Post a Comment