அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அமரியெனும் மாயே பகவதி நீயே
அருள்புரிவாயே பைரவி தாயே
உன் பாதம் சரணமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமையே குமரியே
திருக்கோடிக்காவல் ……
பல்லவி
திருக்கோடிக் காவல் திரிபுரசுந்தரியின்
திருவடி பணிந்து மனமாரத்துதித்தேன்
துரிதம்
திருமகள் கலைமகள் அரனயனரியும்
குரு நாரதரும் சுகசனகாதியரும்
சுரபதி நரர் சுரர் ரதிபதி அனைவரும்
கரம் பணிந்தேத்தும் பரமேச்வரியின்
அனுபல்லவி
இருவினையகற்றும் ஶ்ரீலலிதாம்பிகையின்
திருமால் கேசவன் அன்பு சோதரியின்
சரணம்
கரும வினைப் பயனால் கட்டுண்ட என்னை
திருவுள்ளம் கொண்டு விடுவிக்க வேண்டியும்
பெரும் பிணி பவக்கடல் கடந்திட எனக்கு
உறு துணையாயிருந்து அருள் புரிய வேண்டியும்