திருக்குடந்தை ஆராவமுதன்
பல்லவி
ஆராவமுதன் அவனன்றி கருணைமிகு
வேறோர் தெய்வம் பாரினில் இல்லை
துரிதம்
நாரதர் நான்முகன் சுகசனகாதியர்
நரர்சுரரிந்திரன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
காரார் குழலாள் கோமளவல்லி
தீராக் காதலுடன் உடனிருந்து போற்றும்
சரணம்
ஓராயிரம் நாமமுடைய கேசவன்
மாரனை மிஞ்சும் பேரெழில் அழகன்
சீரும் சிறப்பும் மிகு திருக்குடந்தைத்திருத்தலத்தில்
சாரங்கபாணியாய் பள்ளி கொண்டிருக்கும்
பல்லவி
ஆராவமுதன் அவனன்றி கருணைமிகு
வேறோர் தெய்வம் பாரினில் இல்லை
துரிதம்
நாரதர் நான்முகன் சுகசனகாதியர்
நரர்சுரரிந்திரன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
காரார் குழலாள் கோமளவல்லி
தீராக் காதலுடன் உடனிருந்து போற்றும்
சரணம்
ஓராயிரம் நாமமுடைய கேசவன்
மாரனை மிஞ்சும் பேரெழில் அழகன்
சீரும் சிறப்பும் மிகு திருக்குடந்தைத்திருத்தலத்தில்
சாரங்கபாணியாய் பள்ளி கொண்டிருக்கும்
No comments:
Post a Comment