கமலநாபன்
பல்லவி
கமலநாபனே காத்தருள்வாயென
நமஸ்கரித்தேன் உந்தன் மலர்ப்பதம் தனையே
அனுபல்லவி
அமரரும் சனகாதி முனிவரும் நாரதரும்
நமச்சிவாயனும் நான்முகனும் பணிந்தேத்தும்
சரணம்
நமனாகிக் கம்சனை வதம் செய்த மாயனே
சமரம் புரிந்து அரக்கர் குலமழித்த
கமலக்கண்ணனே கேசவனே மாதவனே
அமரேந்திரன் கர்வம் தீர்த்த மதுசூதனனே
No comments:
Post a Comment