கற்பகமாதா
பல்லவி
கற்பகமாதா கனிந்தருள் தா தா
சொற்களுக்கடங்காத தற்பரமே அழகே
அனுபல்லவி
சிற்பரன் சிவன் போற்றும் திருமயிலை வளர்
அற்புதமே அருளே கேசவன் சோதரி
சரணம்
கற்பனை வாழ்வில் மனம் களித்திருந்தேன்
உற்சாகமாயுலகில் சுற்றித் திரிந்தேன்
அற்ப வாழ்வு சதமில்லை என்றறிந்து
பொற்பதம் பணிந்தேன் நற்கதியருள்வாய்
No comments:
Post a Comment