தேங்காய் கணபதி
பல்லவி
தேங்காயிலும் தோன்றிக் காட்சியளித்திடும்
ஓங்கார கணபதியே உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
ஓங்கி உலகளந்த கேசவன் மருகனே
காங்கேயன் தமயனே ஆனைமுகத்தோனே
சரணம்
ஆங்காரம் நீக்கி ஐம்புலனும் உள்ளடக்கி
நீங்கா பேரின்பம் எந்நாளும் பெற்றிடவே
பாங்குடனே மலர் தூவி அருச்சனைகள் செய்து
தீங்கின்றித்துதித்து நாளுமுனைப்போற்றி
No comments:
Post a Comment