ஆனைமுகன்
பல்லவி
அனைத்துமானவனை ஆனைமுகத்தோனை
மனத்திலிருத்தி அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
வினையிடர் களைந்திடும் விக்னவிநாயகனை
வேதமுதல்வனைக் கேசவன் மருகனை
சரணம்
நினைத்த காரியம் குறைவின்றி நிறைவேற
அனைவரும் முதல் வணங்கும் வாரணமுகனை
வனக்குறத்திதனைமணந்த குமரனின் மூத்தவனை
முனிவரும் தேவரும் மூவரும் வணங்கும்
No comments:
Post a Comment