வண்புருடோத்தமன்
பல்லவி
வண்புருடோத்தமனை வானவர்கோனை
கண்ணனைக்கேசவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
கண்கவர் பேரழகி புருடோத்தமநாயகி
அண்மையிலிருந்து அழகுடன் காட்சிதரும்
சரணம்
தண்மதிமுகத்தானை தாமரை பதத்தானை
உண்டுலகுமிழ்ந்தானை வெண்ணையுண்ட வாயனை
விண்ணோரும் மண்ணோரும் சுகசனகாதியரும்
கொண்டாடிப் போற்றும் புண்டரீகாக்ஷனை
No comments:
Post a Comment