நீதான் துணை
பல்லவி
நீதான் துணையென்றும் கோவிந்தா
பாதாரவிந்தம் சரணடைந்தேன்
அனுபல்லவி
மாதா பிதா குரு தெய்வமென்று
யாதுமாகி நின்ற பரம்பொருளே கேசவா
சரணம்
வேதாகமசாஸ்த்ர புராணங்கள் போற்றும்
சீதாபதியே மதுசூதனா
ஆதாரம் நீயே அகிலமனைத்திற்கும்
ஆதரவு தந்தெனையே ஆட்கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment