வரசித்தி விநாயகன்
பல்லவி
வணங்கினேன் வரசித்தி விநாயகன் பதம்
கணங்களின் தலைவன் வேழமுகத்தழகன்
அனுபல்லவி
குணங்களில் சிறந்து விளங்கிட விரும்பியும்
தனம் புகழ் கல்வியனைத்தும் பெற வேண்டியும்
சரணம்
பிணங்கிய குறமகள் வள்ளியை முருகன்
மணந்திட உதவிய ஐங்கரன் ஆனைமுகன்
இணையவன் கருணைக்கு ஈடில்லையென்றே
துணையந்தக் கேசவன் மருகனெனத்துணிந்து
No comments:
Post a Comment