கேசவன் சரணம்
பல்லவி
வதம் புரிந்து கம்சன் கதை முடித்த கேசவன்
அனுபல்லவி
விதம் விதமாயவதாரம் அவனியிலெடுத்த
யதுகுல திலகன் யசோதை மைந்தன்
சரணம்
மதம் கொள் கரிக்கபயம் விரைந்தளித்த மாதவன்
கதியெனக் கதறிய அபலையை காத்தவன்
துதித்திடுமடியார்கள் பவபயம் களைபவன்
சதமவன் சரணகமலங்களெனத் துணிந்து
பல்லவி
வதம் புரிந்து கம்சன் கதை முடித்த கேசவன்
இதம் தரும் பதம்தனை நிதம் துதித்தேன்
அனுபல்லவி
விதம் விதமாயவதாரம் அவனியிலெடுத்த
யதுகுல திலகன் யசோதை மைந்தன்
சரணம்
மதம் கொள் கரிக்கபயம் விரைந்தளித்த மாதவன்
கதியெனக் கதறிய அபலையை காத்தவன்
துதித்திடுமடியார்கள் பவபயம் களைபவன்
சதமவன் சரணகமலங்களெனத் துணிந்து
No comments:
Post a Comment