கண்ணன் ( இஷ்ட தெய்வம்)
பல்லவி
மனதுக்குப் பிடித்தவன் கண்ணன் மட்டுமே
தினமவன் திருநாமம் போற்றித் துதித்தேன்
அனுபல்லவி
கனவிலும் நினைவிலும் அவன் திருவுருவமே
கண்டு மகிழ்ந்து களிப்படைந்திடுவேன்
சரணம்
சினம் கொண்டு காளிங்கன் தலைமீது நின்று
களிநடம் புரிந்த கமலநாபன்
அனங்கனையீன்ற மாதவன் கேசவன்
வனமாலை கௌத்துபமணிந்த முகுந்தன்
No comments:
Post a Comment