தேகளீசன்
பல்லவி
தேகளீசனை உலகளந்த பெருமாளை
வேகமே விரைந்தெனை ஆட்கொள்ள வேண்டினேன்
அனுபல்லவி
ஆகம வேத புராணங்கள் போற்றும்
நாகத்தணையானை கேசவனை மாதவனை
சரணம்
சாகசம் புரிந்து வாமனனாய்த் தோன்றி
மாவலியின் கர்வம் தீர்த்த மாயனை
மோகமிகு பூங்கோவல் நாச்சியார் கரம் பிடித்த
மேகவண்ணனைக் கமலநாபனை
No comments:
Post a Comment