மாயக்கண்ணன்
பல்லவி
கானக்குழலூதும் மாயக்கண்ணனை
தீனசரண்யனை உளமாரத்துதித்தேன்
அனுபல்லவி
மோனத்திலாழ்ந்து ஞானத்தவம் செய்யும்
ஆனிறை மேய்ப்பவனை வேணுகோபாலனை
சரணம்
வானுறை தேவரும் கோபரும் கோபியரும்
மானுடர் யாவரும் மகிழ்வுடன் கொண்டாடும்
ஆனந்தகேசவனை ஆயர் குலத்தோனை
கானகத்திடை திரியும் நந்தகுமாரனை
தானமும் தவமும் நன்னெறியறிவும்
ஞானமும் கல்வியும் நானென்றும் பெறவும்
ஈனவிஷயங்களிலீடுபாடின்றியே
ஊனம் களைந்தென் மன இருள் நீங்கவும்