Saturday, 13 April 2024

 நந்திகேச்வரனை……


                     பல்லவி


நந்திகேச்வரனை சிவனைச்சுமப்பவனை

வந்தனை புரிந்தேன் எனக்கருள வேண்டுமென


                  அனுபல்லவி


 நந்தி வடிவில் சிவனை சுமந்த கேசவநந்தியை

 முந்தைய பழவினை களைந்திடச்செய்பவனை


                     சரணம்

இந்திரன் முதலான தேவர்களும் கணங்களும்

சந்திர சூரியனும் கோள்களும் பிரமனும்

சிந்தையில் வைத்து சீரடி போற்றிடும்

விடை வாகனனை ஈசனின் காவலனை




  "श‍ृङ्गी भृङ्गी रिटिस्तुण्डी नन्दिको नन्दिकेश्वरः"

 

          ஹர ஹர சங்கர…..


                     பல்லவி


      ஹர ஹர சங்கர வைத்யநாதனை

     கரம் சிரம் கூப்பி பணிந்து துதித்தேன்


                  அனுபல்லவி


     முரஹரன் கேசவன் நேசனை ஈசனை

     நரர் சுரர் நான்முகனிந்திரன் வணங்கிடும்


                       சரணம்


 அரவணிந்தவனை அமுதகடேசனை

 கரங்களில் மான் மழவும் சூலமுமேந்திடும் 

  புரமெரித்த பரமனைத் திரிபுராந்தகனை

 சிரந்தனில் கங்கையை வைத்திருக்கும் சிவனை


  வரம் தரும் கரமும பயகரமும் நீட்டும்

  திரிபுர சுந்தரி மங்களாம்பிகையுடனிருக்கும்

  பரமேச்வரனை பாதிமதியணிந்தவனை

  வையச்சேரி வளர் அகச்தீச்வரனை

 


शंकरं शंकराचार्यं केशवं बादरायणम् ।

सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ॥


नारायणं पद्मभुवं वसिष्ठं शक्तिं च तत्पुत्रपराशरं च ।

व्यासं शुकं गौडपदं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यम्॥


श्री शंकराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यम् ।

तं तोटकं वार्तिककारमन्यानस्मद्गुरून् संततमानतोऽस्मि ॥



 🌹 உண்மையில் செயல்படுபவன் இறைவன்தான். ஆனால், மனிதர்கள் 


'நான் செய்தேன்', நீ செய்தாய், 

அவன் செய்தான் என்றெல்லாம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள் என்னும் கருத்தை மிக அழகாகச் சொன்ன கவிதை வரிகளின் மேற்கோள். 

"வண்டியை  இழுப்பது என்னவோ 

மாடுகள்தான், ஆனால் சக்கரங்கள் கிடந்து

சத்தமிடுகின்றன." 🌹 அதனால் அல்டாப்பு மனிதர்களாய் இருக்காதீர்கள்..


     முன்னவனே ஶ்ரீராமா……


                    பல்லவி


முன்னவனே ஶ்ரீராமா உன்னையே துதித்தேன்

இன்னமும் உன்னருள்தர என்ன தயக்கம்


                  அனுபல்லவி


கன்னலே இன்னமுதே கேசவனும் நீயே

பன்னக சயனன் நாராயணனும் நீயே


                      சரணம்


என்னவென்று சொல்வேன் இந்த வேடிக்கையை

உன்னருளால் மாடுகள் வண்டியைஇழுக்கின்றன

தன்னால் தான் வண்டி ஓடுகின்றதென

முன்னால் வந்து சக்கரங்கள் ஓலமிடுவதை


राम रामेति रामेति, रमे रामे मनोरमे ।

सहस्रनाम तत्तुल्यं, रामनाम वरानने ॥


                   

 கதியேது ராமா…..


                     பல்லவி


   கதியேது ராமா உனையன்றி வேறு

   துதித்தேன் உனதிரு கமலபதங்களையே


                  அனுபல்லவி


 உதிக்கின்ற சூரியனைப்பழிக்குமழகுடையவனே

 மதுகைடபரின் கதைமுடித்த கேசவனே


                       சரணம்

  பதிகளில் சிறந்த அயோத்தி மாநகரில்

  அதிலாவண்யமுடனெழுந்தருளிக் காட்சி தரும்

  பதித பாவனனே பரமதயாகரனே

 விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவனே

 


           இன்னுமென்ன யோசனை……


                        பல்லவி

  இன்னுமென்ன யோசனை இன்னமுதே ஶ்ரீராமா

    உன்னையே நம்பிடும் எனைக்காத்தருள

                    அனுபல்லவி

    அன்னை கோசலையின் அன்புப் புதல்வனே

    சென்ன கேசவனே ஶ்ரீமன் நாராயணனே

                         சரணம்

   முன்னமொரு யானையுனை அழைத்ததுமே காத்தாய்

 இன்னமொரு காரிகைக்கு அபயமளித்தாய்

தென்னிலங்கை சென்று ராவணனை வதைத்தவனே

சொன்ன சொல் காக்கும் அயோத்தி மன்னனே


புன்னகை முகத்தோனே புவி போற்றுமுத்தமனே

தன்னுடன் குகனையும் சோதரனாயேற்றவனே

உன்னருளாலன்றோ உலகமியங்குவது

பன்னகசயனனே கணபுரத்தென் கருமணியே



श्री रामचन्द्र कृपालु भजु मन हरण भव भय दारुणं ।
नवकञ्ज लोचन कञ्ज मुख कर कञ्ज पद कञ्जारुणम् ॥ 

  கண்ணனுக்குத் தெரியும்….


            பல்லவி


கண்ணனுக்குத்தெரியுமெனக்கென்ன

வேண்டுமென

புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் காட்சி தரும்

                    அனுபல்லவி

வண்ணமிகு கேசவன் வடிவழகன் ஶ்ரீகிருஷ்ணன்

தண் மதி முகத்தோன் தாமரை நாபன்

                     சரணம்

உண்டுலகுமிழ்ந்த உத்தமன் தாமோதரன்

அண்ட சராசரங்களைத் தன்னுள் வைத்திருப்பவன்

பண்டொருநாள் குன்றைக்குடையாகப் பிடித்தவன்

பண்ணிசைத்தவன் புகழை ப்பாடும் நானறிவேன்


वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम्

देवकीपरमानन्दं कृष्णं वंदे जगद्गुरुम् || 

आतसीपुष्पसंकाशम् हारनूपुरशोभितम्

रत्नकण्कणकेयूरं कृष्णं वंदे जगद्गुरुम् || 

 ஒற்றைப் பிறையணிந்த…..


                       பல்லவி


ஒற்றைப்பிறையணிந்த காமக்ஷியுனைத் துதித்தேன்

இரட்டை பிறையணிந்த கமலையாய்க் காட்சி தந்தாய்

                     அனுபல்லவி


புற்றிடங்கொண்ட தியாகேசன் நாயகியே

நற்றவத்தோர் போற்றும் கேசவன் சோதரியே


                       சரணம்


எற்றைக்குமேழேழ் பிறவிக்குமென் துணை 

புற்றுரை மாரியே சமயபுரத்தாள் நீயே

உற்றார் சுற்றமனைத்தும் நீயே

பற்றினேன் உன் பதம் எனக்கருள்வாயே