கஜானனன்
பல்லவி
துணை புரிந்தருள் ஸ்ரீ கஜானனா
வணங்கினேனுந்தன் பாத கமலமே
அனுபல்லவி
பிணங்கிய வள்ளி தனை குகனுக்கு
மண முடித்திட அருள் புரிந்தவா
சரணம்
கணமுமுன்னிரு திருவடிச்சரண்
பணிந்து போற்றினேன் கேசவன் மருகா
பிணியிடர் களை களைந்து என்னையே
அணைத்து ஆண்டிட உன்னை வேண்டினேன்