Friday, 19 September 2014

திருவரங்கநாதன்


     திருவரங்கநாதன் 


     பல்லவி

    திருவரங்கநாதனை மனமாரத்துதிதேன்

     திருவரங்கநாயகி உடனிருந்து போற்றும்

             அனுபல்லவி

     பெருமைக்குரிய  திருவரங்கம் பதிதன்னில்

     அருட்காட்சி யளித்திடும் நம் பெருமாளை

                 சரணம்

      குருநாரதரும் நான்முகனுமிந்திரனும்

      அருந்தவ முனிவர்கள் சுகசனகாதியுரும்

      தேவரும் வீடணனும் கரம்பணிந்தேத்தும்
   
        தேவாதி தேவனைத் திருமாலைக் கேசவனை 

ஸ்ரீநிவாசன்



           ஸ்ரீநிவாசன் 




               பல்லவி


       தேவாதி தேவனை  ஸ்ரீனிவாசனை

       நாவாரப் பாடி மனமாரத்துதிதேன்


     
                 அனுபல்லவி


        தேவியரிருவரும் உடனிருந்து   கொண்டாடும்

        கோவிந்தனை  ஏழு மலையானைக் கேசவனை


                       சரணம்

         தேவரும் பிரமனும் சுகசனகாதியரும்

          தேவேந்திரனும்  குரு நாரதரும்

           அவனியோர்  யாவரும் கரம்  பணிந்தேத்தும்

           ஸ்ரீ வாசு தேவனை  திருவேங்கடமுடையானை

           

வேழமுகன்



   வேழமுகன் 



     பல்லவி

  ஆனந்தமளித்திடும்  வேழமுகத்தோனை

   மகா கணபதியை  மனமாரத் துதித்தேன்


         அனுபல்லவி

     தானந்த மில்லாத தீனசரண்யனை

     ஞானக்கொழுந்தினைக்கேசவன் மருகனை


               சரணம்

      மோனத்தவம் செய்யும் முனிவருமிந்திரனும்

      ஞானியரும்  நந்தியும்  கணங்களும்  முருகனும்

       வானுரை  தேவரும்  யாவரும் வணங்கிடும்

       ஆனைமுகத்தோனை  விக்ன விநாயகனை 

ஜ்வாலா நரசிம்மன்



        ஜ்வாலா நரசிம்மன் 


          பல்லவி


    பாலன் பிரகலாதனுக்கருள் செய்த கேசவனை

    ஜ்வாலா நரசிம்மனை மனமாரத்துதித்தேன்


              அனுபல்லவி

      ஆலிலை பாலனாய் அகிலம் காத்தவனை

      காலனாய்  இரணியனின் கதை முடித்தவனை

              சரணம்

       சீறும்  அழகிய சிங்க முகமும்

       ஈரெட்டு கரமுமாய் காட்சி யளித்திடும்

       கோர நரசிம்மனை திருவின் நாயகனை

       பாரோர் பணிந்தேத்தும் நாராயணனை
     
     

     

Thursday, 18 September 2014

ஸ்ரீ கமலாம்பிகை




 ஸ்ரீ கமலாம்பிகை 


    பல்லவி

  கமலாம்பிகையை  மனமாரத் துதித்தேன்

   அமரரும் முனிவரும் கணங்களும் பணிந்தேத்தும்


    அனுபல்லவி


     சமம் தனக்கொருவரும் இல்லாத தேவியை

     உமா மகேஸ்வரியை  கேசவன் சோதரியை


       சரணம்

       காமாதியறு பகை  மாயையை விலக்கிடும்
     
        சாமமுதல் வேதங்களனைத்தும்  வணங்கிடும்

        ஓமெனும் மந்திரப்பொருளானவளை

         தூமலர் தூவி   நாமங்கள் ஓதி




   






      Mohanasundaram Subramani
மாயா மோஹவினாசினீம்
முனிக ணைராராதி தாம் தன்மயீம்
ச்ரேய: ஸஞ்சய தாயினீம் குணமயீம்
வாய்வாதி பூதாம் ஸதாம்
ப்ராத: கால ஸமானசோப மகுடாம்
ஸாமாதி வேதை ஸ்துதாம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்



ஆடும் கண்ணன்

       ஆடும்  கண்ணன் 


         பல்லவி

 அசைந்தாடும் கண்ணனை அழகான கேசவனை

  அசைவின்றி நின்று கண்ணாரக் கண்டேன்

         அனுபல்லவி

   திசை நான்கும் புவியேழும் வானோரும் காண

   இசையோடு ஜதியோடு விசையோடு விரைவாக

    தக்கிட தரிகிட தளாங்கு தகதிமி

     தளாங்கு தகதிமி  தகதிமி தகவென

           சரணம்

      கைவளை குலுங்க முத்து மாலைகளுமாட

       காலிலிட்ட கொலுசும் தண்டைகளுமாட

       காதிரண்டிலும் மகரக் குண்டலங்களாட 

       கொண்டையில் சூடிய மயில் பீலியாட   

  
       கண்ணிரண்டில் விழியாட  ஊதும் குழலாட 

       கற்றைக் குழலாட  நெற்றிச்சுட்டியாட 

        மார்பில் மறுவாட  துளபம் கௌத் துபமாட
          
        கட்டிய பட்டாடை காற்றிலசைந்தாட 


         வசைபாட வந்த கோபியருமாய்ச்சியரும் 

         மெய் மறந்து வசமிழந்து உடன்சேர்ந்து  ஆட 

          காணும் கோபாலரும் களிப்புடனே  ஆட 

          மறையாட மயிலாடக்  கன்றோடு  பசுவாட 

          



          

இயலாமை

 இயலாமை!


வாடப்பிறந்தவர்  வாடிக்கொண்டிருக்க

 ஆளப்பிறந்தவர் ஆண்டுகொண்டிருக்கப்

 பாடப் பிறந்தவர் பாடிக்கொண்டிருக்க

 உலகம் சுழன்று கொண்டிருக்கட்டும்

ஊதும் சங்கு ஊதிகொண்டிருக்கட்டும் !