Thursday, 7 September 2023

பலன் கருதாமலே….

 


                   பலன் கருதாமலே….


                             பல்லவி

       பலன் கருதாமலே  நாம மோதும் பக்தனுக்கு

       நலமளிக்கும் தேவியே உன்னைத்துதித்தேன்

                           அனுபல்லவி

      தலங்களுள் சிறந்த காஞ்சிமா நகருறை

      உலகம் போற்ற வீற்றிருக்குமன்னையே

                             சரணம்

      நிலம் நீர் நெருப்பு காற்று வெளியாகி

      அலகிலா விளையாடல் பல புரிபவளே

      அலங்காரப்பிரியன் கேசவன் சோதரியே

      லலிதாம்பிகையே   ஶ்ரீ காமாக்ஷி 



யாருக்கு தேவி வசப்படுவாள்?


பதிவர் ஞானவேல் அங்கப்பன். அவர்களுக்கு நன்றிகள்.


நாம் கேட்டதெல்லாம் கிடைத்தபொழுது  இருக்கும் நம்பிக்கையைவிட, ஒரு விஷயம் கிடைக்காதபோது இருக்கும் நம்பிக்கையே விசேஷமானது. அதுவே நிலையான நம்பிக்கை.


நீ எதை செய்தாலும் அது என்னுடைய உயரிய நன்மைக்கே  என்ற  மனபக்குவதுடன் தேவியை பற்றிக்கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் கண்டிப்பாக தேவி அனுக்கிரஹம் பண்ணுவாள்.


ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், நாம் கேட்டு ஒன்று கிடைக்கவில்லை என்றால் அவளுக்கு கொடுக்கும் வல்லமை இல்லை என்று அர்த்தம் இல்லை. அவளால் கொடுக்க முடியாதது இந்த மூவுலகிலும் இல்லை.


கேட்டது கிடைக்கவில்லை என்றால் நாம் கேட்டதைவிட உத்தமமான ஒன்றை நமக்கு தரப்போகிறாள் என்று அர்த்தம்.

நாம் கேட்டதைவிட அதிகமாக தருவாள், நமக்கு கேட்க  தெரியாத உயரிய விஷயங்களையும் கேட்காமலேயே அள்ளி தருவாள் தேவி. 


ஏதோ ஒன்றை எதிர்பார்த்து  பூஜிப்பவனுக்கு கோரிய பயன் கிடைக்காவிட்டால் அவனுடைய நம்பிக்கை தேய்ந்துப்போகும் . அவளுடைய அன்பிற்காக மட்டும் உருகி உருகி நித்தம் பூஜிப்பவனுக்கு கேட்டது கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும்  சரி, அவனுடைய பக்திக்கும், நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் ஒரு  பொழுதும் தேய்மானம் என்பதே கிடையாது. அப்பேற்பட்ட பக்தனுக்கு மட்டுமே தேவியானவள் வசப்படுவாள் 


யார் அவளுடைய அன்புக்கு பாத்திரமாகிறாரோ அவர்களுக்கு குறைவில்லா வரங்களை அள்ளித்தருவாள்.


அதற்கு முன்பு அவள் வைக்கும்  லிட்மஸ் சோதனை ' litmus test' தான் இந்த 'waiting period'.

எந்த நாமம்…….

 


                          எந்த நாமம்…….


                                   பல்லவி

           எந்த நாமம் சொல்லியழைத்தால் நீ வருவாயோ

           உந்தனாயிரம் நாமங்களில் கேசவா

                               அனுபல்லவி

          சொந்த நாமம் எதுவோ நாராயணா

          அந்த நாமம்தனை நீயெனக்குறைப்பாய்

                                   சரணம்

          அந்த நாளிலாதிமூலமே என்று கரியழைத்த நாமமோ

          நந்தா விளக்கே என ஆழ்வார்கள் சொன்ன நாமமோ

          கோவிந்தாவென பாஞ்சலி கதறிய திருநாமமோ

          தந்தை தயரதன் அன்புடனழைத்த ராம நாமமோ

Wednesday, 6 September 2023

கண்ணா நீ……

Pallavi

Krishna nee begane baro

Anupallavi

Begane baro, Mukhavannu toro 

Charanam
1.Kallal andhige gejje nilada baavuli.
Neelavarnane , natya madutha baro 
2.Odiyalli odi gejje , beralalli oongura,
Koralalli haakitha vaijayanthi male
3.Kasi peethambara kaiyalli kolalu,
Pooshitharigandha mayyallo lagamma
4. Taayige baayalli jagavannu toritha
Jagadodharaka namma udupi Sri Krishna


Pallavi
Krishna, you please come quickly
Anupaalavi
Come quickly and show your face
Charanam
1.With anklets in the leg and blue gem studded bangles in the hand,
Oh blue coloured one , come dancing to me.
2.In the hips you wear belt with bells, rings on your fingers,
And the garland of Vaijayanthi on your neck, please come.
3.Adorned with yellow silk of Benares with flute in your hand,
And with sandal paste applied all over body.
4. You who showed the universe in your mouth to your mother,
Oh God who carried the earth, Oh Our God Udupi Sri Krishna

                                   கண்ணா நீ……

                                     பல்லவி

                         கண்ணா நீ வேகமே வருவாய்  ( கமலக்…)

                                    அனுபல்லவி

                        வண்ண நிலவைப் பழிக்குமுன் முகம் காட்டி
                        கொண்டை அசைந்தாடக் குழலூதும் அழகோடு
                        
                                        சரணம் 

                        தண்டை கொலுசுடனே அழகுக் கைவளையோடு
                        புண்ணியனே உன் மார்பில் வைஜயந்தியாட
                        வெண்ணையுண்ட வாயனுன் இடுப்பில் ஒட்டியாணமும்
                        வெண் பீதாம்பரமணிந்து மோதிர விரல்கள் மின்ன…..

                        பண்ணிசைத்துக் குழலூதி பரவசத்துடனே
                        வெண் முத்து மாலைகளும் மலர் மாலையுமணிந்து
                        மண்ணையுண்ட வாயை அன்னைக்குக் காட்டிய
                        சென்ன கேசவனே ஜகமெலாம் புகழும் …. கமலக்

மண்ணையுண்ட வாயனை……

ஒருகை அவலுடன் உருட்டிய வெண்ணெய்

தரமாய் செய்தநல் தட்டையும் முறுக்கும்

அரிச்சீ டையுடன் ஐவகை இனிப்பும்

இருக்கை யிலேனடா இன்னுமிக் கள்ளம்


பொத்த வுரலைக் கவிழ்த்து அதன்மேலேறி

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணையும்

மெத்தத் திருவயிறார விழுங்கிய

அத்தன் வந்தென்னைப் புறம்புல்குவான்

ஆழியானென்னைப் புறம்புல்குவான்


                                மண்ணையுண்ட வாயனை……



                                               பல்லவி

                       மண்ணையுண்ட வாயனை மாமாயன் கேசவனை

                       பண்ணிசைத்துப்பாடி உளமாறத் துதித்தேன்

                                            அனுபல்லவி

                       எண்ணம் முழுதும் அவனையே நினைத்தேன்                                     

                       கண்ணிலவன் செய்த லீலைகளே கண்டேன்   

                                               சரணம்       

                      வெண்ணை ஒரு உருண்டையும் கைப்பிடி அவலும்

                      எண்ணையில் பொரித்த முறுக்கும் தட்டையும்

                      கண்ணைக் கவருமினிப்பும் சீடையும்

                      திண்ணமுற உண்ட கண்ணனென் புறம்புல்குவான்



வெண்ணையும் மண்ணையும்…..

 


                                     வெண்ணையும் மண்ணையும்…..


                                               பல்லவி

                           வெண்ணையும் மண்ணையுமுண்டு திரிந்தவனை

                           கண்ணனைக் கேசவனைப்பண்ணிசைத்துத் துதித்தேன்

                                            அனுபல்லவி

                           தண்மதி முகத்தோனை தாமரைப் பதத்தோனை

                           கண்கவரழகனை க்கருநீலவண்ணனை

                                                சரணம்

                           விண்ணாளுமிந்திரனும் மண்ணாளும் மன்னர்களும்

                           எண்ணிலா முனிவர்களும் நரர் சுரரும் நாரதரும்

                           புண்ணியம் செய்தோரும் வெண்ணிலவுமாதவனும்

                           கண்ணியத்துடன் வணங்கும் ஶ்ரீமன் நாராயணனை

                           

     

பல பாடல்…….

 


                                            பல பாடல்…….


                                                 பல்லவி

                               பல பாடல் உனைப்போற்றி பாடிவிட்டேன் கண்ணா

                               நலமருள இன்னும் மனமில்லையா உனக்கு

                                              அனுபல்லவி

                              அலகிலா விளையாடல் பல புரிந்த கேசவனே

                              உலகோர் துதித்திடும் ஶ்ரீமன் நாராயணனே

                                                 சரணம்

                             புலன் வழி செல்லுமென் மனக்குரங்கையடக்க

                             உலகுண்ட வாயனே நீயேயென் துணை

                             தலங்களுள் சிறந்த குருவாயூர் பதிதன்னில்

                             நலமுடன் வீற்றிருக்கும் குருவாயுரப்பனே


                            நாராயண நாராயண நாராயண நாராயண

                            நாராயண நாராயண நாராயண நாராயண

                            நாராயண நாராயண நாராயண நாராயண

                             நாராயண நாராயண நாராயண நாராயண

Friday, 1 September 2023

ஆயிரம் திருநாமம் …….

 


                                ஆயிரம் திருநாமம் …….

    

                                       பல்லவி

                      ஆயிரம் திருநாமம் சொன்னாலும் போதும்

                      தூயவளே உன்னை மனமாரத்துதித்து

                                      அனுபல்லவி

                      நோய் நொடி பவ வினை யனைத்தும் தீரும்

                      தாயினும் மேலான  கேசவன் சோதரியே

                                        சரணம்

                      பாயிரம் வேறேதும் பயில வேண்டாம்

                      கோயில் குளமெங்கும் திரியவும் வேண்டாம்

                      தேயாத புகழ் மேவும் திருமீயச்சூர் வளர்

                      தாயே ஶ்ரீலலிதாம்பிகையே உனது