Thursday, 10 November 2022

திருப்பெருந்துறை……

  என் அய்யனே.. உன்பால் பேரன்பு பூண்டு உனது பொன் போன்ற சுடர்மிகு திருவடிகள் பால் அன்புடன் வணங்கி, நெருப்பில் வீழ்ந்த மெழுகு போல உனை எண்ணி உருகி, உருகி உன்னோடு சிவநகர் புகுந்தனர் உனது அடியார்கள். நான் அவ்விதம் அழுது உருகி,  உருகி உனைத் தொழவில்லையோ.? அவர்களைப் பின் தொடரவில்லையோ? வீணே இப்பிறவி கழிந்திடுமோ? நான் என்ன சொல்லித் தொழுது  உனை பின் தொடர்ந்து வரமுடியும்? எனக்கு நீ சொல்லேன்.. 


பேரின்ப அனுபவத்தில் தன்னை மறந்திருத்தல் ஆனந்த பரவசமாகும்."

திருச்சதகம்  ஆனந்த பரவசம்

அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த
மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே.

பதப்பொருள் : நின்பால் அன்பாம் மனமாய் - உன்னிடத்து உண்மையான அன்புடைய மனத்தராய், அழல் சேர்ந்த மெழுகே அன்னார் - நெருப்பிலிட்ட மெழுகு போல உருகுகின்றவர்களாய், மின் ஆர் - ஒளி நிறைந்த, பொன் ஆர் கழல் கண்டு - பொன் போன்ற உன் திருவடியைப் பார்த்து, தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் - வணங்கி உன்னைத் தொடர்ந்து வந்தவர்களாகிய அடியாரோடும், தொடராதே - பின்பற்றிச் செல்லாமல், பழுதே பிறந்தேன் - தவறுடையவனாயினேன், என் கொண்டு உன்னைப் பணிகேன் - இனி, எத்துணை கொண்டு உன்னை வணங்குவேன்? அழுகேன் - உனது திருவருளைப் பெறுதற்கு அழுகின்றேன் (எனக்கு இரங்கியருள்வாயாக.)

விளக்கம் : அன்பு மனத்தவர் இறைவன் கழலிணையைக் கண்டதும் உருகும் தன்மையராதலின், 'அழல் சேர்ந்த மெழுகே அன்னார்' என்றார். இறைவன் திருவடியை அழலினுக்கு உவமிப்பார், 'மின்னார் கழல்' என்றார். அழலினைச் சார்ந்த மெழுகு அதிற்கலந்துவிடுவது போலக் கழலினைச் சார்ந்த அடியாரும் கலந்துவிட்டாராதலின், 'தொழுதே உன்னைத் தொடர்ந்தார்' என்றார். தாம் பின்தங்கினமையால் அடியார் துணையுமின்றி எத்துணை கொண்டு தொடர்வேன் என்பார், 'என் கொண்டுன்னைப் பணிகேனே?' என்றார்.



                                                                  திருப்பெருந்துறை……


                                                                              பல்லவி

                                                         திருப் பெருந்துறையுறை சிவபெருமானே

                                                         அருவ வடிவான உன் திருவடி பணிந்தேன்

                                                                           அனுபல்லவி

                                                         திருமால் கேசவனும் பிரமனும் தேடிய

                                                         திருவடியும் திருமுடியுமுடைய பெருமானே          

                                                                                சரணம்                                           

                                                   உருகும் மெழுகு போலுன் பொன்கழல் கண்டு

                                                   உருகுமடியாரை வணங்கித் தொடராமல்

                                                   பெரும் பழுது செய்த எனை ஆட்கொள்ளக்

                                                   கருணையுடன் வேண்டினேன் ஆண்டருள்வாயே

 

Tuesday, 8 November 2022

அமுதத்துக்கிணையான……

 #புகழ்பெற்ற_வைணவத்_திருத்தலங்கள்  #பூவரசன்குப்பம்பூவரச இலையில் அருளிய பெருமாள்!

#ஸ்ரீலட்சுமி_நரசிம்மர்_கோவில் 

பெருமாள் திருநாமம் : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.

தாயார் திருநாமம் : அமிர்தவல்லித் தாயார்.

#அமைந்திருக்கும்_இடம் : 

விழுப்புரம் - பண்ருட்டி சாலையில் 20 கி.மீ. தொலைவில் கள்ளிப்பட்டி. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் பூவரசங்குப்பம்.

#தரிசனநேரம் :  காலை 8:30 மணி முதல் பகல் 12:30 வரை. மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 வரை.

வேறு சிறப்புகள் :  உடற்பிணி, தோஷங்கள் ஆகியவற்றைப் போக்கும் திருத்தலம்

கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். 

இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் #அமிர்தத்திற்கு #இணையான #பலனை #கொடுக்க வல்லவள். இதனால் #அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அனைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.

இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் #பெருமிதத்துடன் #தாயார் #அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது. மற்றொரு #கண் பக்தர்களை #நோக்கியுள்ளது. இது போன்ற அமைப்பு இந்த #பூவுலகில் வேறு #எங்கும் #இல்லை.

முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நரசிம்மர் இத்தலத்தில் மகாலட்சுமியை தன் இடது மடியில் அமர்த்தி காட்சி அளித்தார். அப்போது லட்சுமி முனிவர்களை பார்க்காமல் நரசிம்மரையே பார்த்தார்.

உடனே நரசிம்மர், “நீ முனிவர்களை பார்த்து அருள்பாலிக்காமல் என்னை மட்டும் ஏன் பார்த்து கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்கு லட்சுமி, “#கோபமாக உள்ள நீங்கள் உங்களது #வெப்பத்தை, தரிசிக்க வரும் #பக்தர்களிடம் #காட்டக் கூடாது. எனவேதான் நான் உங்களையே #பார்த்து #கொண்டிருக்கிறேன்” என்றார். 

அதன் பின் #நரசிம்மரின் #கட்டளைக்கிணங்க #லட்சுமிஒரு #கண்ணால் #நரசிம்மரையும், #மற்றொரு #கண்ணால் #பக்தர்களையும் #பார்த்து #அருள்பாலித்து #வருகிறாள். பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகசன்னதியும் இருக்கிறது.  இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும் மற்றும் எதிரிகள் எல்லாம் இல்லாமல் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரம் அன்று சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும். இதில் பங்கு பெறும் அன்பர்களுக்குப் பகைவர் பயம் நீங்கும். பிணிகள் யாவும் விலகும்.


                                                 அமுதத்துக்கிணையான……


                                                                பல்லவி

                                               அமுதத்துக்கிணையான அமுதவல்லித்தாயாரை 

                                               தமது மடிவைத்திருக்கும் நரசிம்மனைப் பணிந்தேன்

                                                             அனுபல்லவி

                                               சமுத்திர குமாரியைக் கேசவன் நாயகியை

                                               அமரர் முனிவர் மற்றும் அமரேந்திரன் வணங்கும்

                                                                    சரணம்

                                               முனிவரைப் பாராது தனை நோக்கும் தேவியைக்

                                               கனிவுடனே கேட்டவர்க்குத் திருமகளுரைத்தாள்

                                               இனியவருக்கிரப் பார்வைகளெதுவுமே

                                               முனிவர்கள் மீது படாதிருக்கவன்றாள்       

 

                                               தனிக்கருணை கொண்டவரும் தேவியிடமுரைத்தார்

                                               இனியவர் நோக்கில் கருணையே இருக்குமென

                                               புனிதரவர் வாக்கினைக் கேட்ட பின்னே திருமகளும்

                                               கனிவுடன் முனிவரையுமவரையும் நோக்கினாள்

                            

                                                            

                                               

Monday, 7 November 2022

அரசர்கள் குலமழித்த…..

  


                                     அரசர்கள் குலமழித்த…..


                                            பல்லவி

                             அரசர்கள் குலமழித்த பரசுராமனை

                             ஜமதக்னி மகனைக்கேசவனைத் துதித்தேன்

                                        அனுபல்லவி

                            பரமசிவன் மனமுவந்து வரமென அளித்த

                            பரசுவைக் கையிலேந்தும் பரந்தாமனை

                                            சரணம்

                            அறமெனக் கருதி தந்தைசொல் கேட்டு

                            சிரம் கொய்து தாயை வதைத்த தனயனை

                            நரர் சுரரிந்திரன் நாரதர் நான்முகன்

                            கரம் பணிந்தேத்தும் புருஷோத்தமனை

                                                      

நாமமொன்றே…..

சிவன் சொல்வது ராமா

ப்ரம்மன் சொல்வது பத்மநாபா

நாரதர் சொல்வது நாராயணா

த்ரொபதி சொன்னது கோவிந்தா

துருவன் சொன்னது வாசு தேவா

பிரகலாதன் சொன்னது ஸீ ஹரி

கஜேந்திரன் சொன்னது ஆதி மூலா

அர்ச்சுனன் சொன்னது அச்சுதா

நம்மாழ்வார் சொன்னது கண்ணா

இராமானுசர் சொன்னது வரதா

ஞானேஸ்வர் சொன்னது இராம கிருஷ்ண

துக்காராம் சொன்னது விட்டலா

ஜெய தேவர் சொன்னது ஜகந்நாதா

சைதன்யர் சொன்னது ஹரே கிருஷ்ணா ஹரே இராமா

நாமும் சொல்வோம் நாளும் நாமா

நாமமே பலம் நாமமே சாதனம்

இராம் க்ருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி


                                                                      நாமமொன்றே…..


                                                                            பல்லவி

                                                     நாமமொன்றே என்றும் நமக்குத்துணை - கேசவன்

                                                                         அனுபல்லவி

                                                     பூமியில் நலமுடன் நாம் வாழச் செய்திட

                                                     காமக்ரோதாதி அறுபகைகள் வென்றிட

                                                                               சரணம்                                                  

                                                     தாமரைப்பூவிலமர் பிரமனுரைத்திடும் 

                                                     மாமறைகள் போற்றும் பத்மநாபனெனும்…….. (நாமமொன்றே…)

                                                     சாம வேதம் தனில் மனம் லயித்திடும்

                                                     காமனின் வைரி சிவனருளிய ஶ்ரீ ராமனெனும்…(நாமமொன்றே…)

                                                     நாரதர் நாவில் தினமுரைத்திடுமந்த 

                                                     நாராயணாவோ பாஞ்சாலி சொல்லும் 

                                                     கோவிந்தாவோ துருவன் துதித்திடும்

                                                     ஶ்ரீ வாசுதேவனென்னுமழகு….. ( நாமமொன்றே…..)

                                                     பக்தன் பிரகலாதன் சொன்ன ஶ்ரீஹரியோ

                                                     கஜேந்திரனழைத்த ஆதிமூலமோ

                                                     பார்த்தன் விரும்பிய அச்சுதனோ மாதவனோ

                                                     நம்மாழ்வார் போற்றிய மாயக் கண்ணனெனும்…(நாமமொன்றே…)

                                                    ஞானேச்வரரின் ஶ்ரீ ராமகிருஷ்ணனோ

                                                    குரு  ராமானுஜர் போற்றிய வரதனோ

                                                    ஜெயதேவர் கொண்டாடும் ஜகந்நாதனோ

                                                    சைதன்யரின் ஹரே ராம ஹரே க்ருஷ்ண ….( நாமமொன்றே…)

                                                    சக்தி தரும் நாம சங்கீர்த்தனமே

                                                    முக்திக்கு வழி செய்யும் ஹரிநாம பஜனமே

                                                    துக்காராம் தினம் துதிக்கும் ஶ்ரீஹரிவிட்டலனோ

                                                    பக்தர்கள் போற்றும் ராமக்ருஷ்ண ஹரியோ….( நாமமொன்றே…)

                                                    

                                                    

                                                                           


Friday, 4 November 2022

மங்காத புகழ் மேவும்……


कल्याणरूपाय कलौ जनानां,
कल्याणदात्रे करुणासुधाब्धे ।
कम्ब्वादिदिव्यायुधसत्कराय,
वातालयाधीश नमो नमस्ते ॥१॥

नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण
नारायण नारायण नारायण नारायण


கல்யாண ரூபாய கலௌ ஜநாநாம்

 கல்யாண தாத்ரே கருணா ஸுதாப்தே  

கம்ப்வாதீ த்வ்வாயுத ஸத்கராய 

வாதாலயா தீச நமோ நமஸ்தே 

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண 

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண 

பொருள்: நன்மையை அருளும் மங்கள(கல்யாண) ரூபத்தில், திருக்கரங்களில் சங்கு போன்ற திவ்யாயுதங்களை ஏந்தியவரும், கலியுகத்தில் பக்தர்களுக்கு வற்றாத நல்வளங்களை வழங்குபவரும், கருணா அமிர்தத்தின் சாகரமானவரும் (சமுத்திரம்) ஆன குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.

          

                                                             மங்காத புகழ் மேவும்……

                      

                                                                     பல்லவி

                                                    மங்காத புகழ் மேவும் குருவாயுரப்பனை

                                                    மங்களம் தருமழகு மாதவனைத் துதித்தேன்           

                                                                  அனுபல்லவி                         

                                                    சங்கரனும் குருவும் வாயுவும் வணங்கிய

                                                    சிங்காரவடிவுடைய ஶ்ரீகிருஷ்ணமூர்த்தியை                                                                                                                                                                    

                                                                     சரணம்

                                                     அங்கமில் மதனையும் மிஞ்சுமழகுடையவனை

                                                     சங்கும் சக்கரமும் கையிலேந்தும் கேசவனை

                                                     பொங்கரவணை துயிலும் பரமபதநாதனை   

                                                     எங்கும் புகழ் விளங்கும் கலியுகவரதனை


                                                     திங்களைப் பழிக்குமங்க சௌந்தர்யமுடையவனை

                                                     பங்கயநாபனை ஶ்ரீ பத்மநாபனை        

                                                     செங்கண்மாலை  மதுசூதனனை       

                                                     அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவனை  


                                                     நாமமோராயிரம் உடையவனைத் திருமாலை

                                                     சாம முதல் வேதங்கள் போற்றும் நாராயணனை

                                                     வாமன மூர்த்தியை வாசுதேவனை

                                                     நாராயண நாராயண நாராயண நாராயண 


                                                     நாராயண நாராயண நாராயண நாராயண 

                                                     நாராயண நாராயண நாராயண நாராயண 

                                                     நாராயண நாராயண நாராயண நாராயண 

                                                     நாராயண நாராயண நாராயணவென்றழைத்து

                                                     

                                                                                                                                                    


தாமரை மலரொத்த…….


         


                                  தாமரை மலரொத்த…….

                             

                                          பல்லவி

                         தாமரை மலரொத்த கண்களுடையவளை

                         மாமயிலை முண்டகக்கண்ணியைத் துதித்தேன்

                                         அனுபல்லவி 

                         காமனைப் படைத்த கேசவன் சோதரியை

                         பாமரர் துதித்திடும் அன்னை பராசக்தியை

                                             சரணம்

                         சாமமுதல் வேதங்கள் சாத்திரங்கள் போற்றும்

                         ஓமெனும் மந்திரப் பொருளான ஈச்வரியை

                         நாமங்கள் பல உடைய திரிபுரசுந்தரியை

                         தூமலர் தூவி மலரடி பணிந்து

                          


                         

Thursday, 3 November 2022

நோக்கும் திசை……

 

                                  நோக்கும் திசை……


                                            பல்லவி

                          நோக்கும் திசை தோறும் செல்வமளித்திடும்

                          காக்கும் கேசவனின் நாயகியைப் பணிந்தேன்

                                         அனுபல்லவி

                          வாக்கின் இறைவியும் தீக்கண்ணுடையவளும்

                          ஊக்கமுடனருகிருந்து போற்றும் திருமகளை    

                                              சரணம்

                          ஆக்கமுடன் என்னை அருகிருந்து காத்து

                          தேக்கமின்றியே கருணையுடன் தயவளித்து                              

                          பாக்கியம் தந்தெனை ஆண்டருள வேண்டுமென

                          ஏக்கமுடனவள் தயை வேண்டித்துதித்து