அபிராமி 25
அபிராமி அந்தாதி:25
நினைத்த காரியம் நிறைவேற
பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி,
பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல்
மூவருக்கும்
அன்னே,உலகுக்கு அபிராமி என்னும் அரு
மருந்தே
என்னே?இனி உன்னை யான் மறவாமல் நின்று
ஏத்துவனே.
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக
விளங்குபவளே! மூவுலகிற்கும் கிடைத்த அரு
மருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க
,முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து
கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள்
பின் திரிந்து அவர்களுக்கு பணி செய்து
வருகின்றேன். அம்மா!அபிராமித்தாயே! நான்
முன் செய்த தவப்பயனே,இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்கு
கின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டே
இருப்பேன்.
பல்லவி
அன்னையே அபிராமி உன்னையே துதித்தேன்
இன்னுமிப்பிறவியில் உனைமறவா மனம் வேண்டி
அனுபல்லவி
பன்னகசயனன் கேசவனும் பிரமனும்
பன்னகாபரணனும் தாயெனவே நினைக்கும்
சரணம்
முன்னம் யான் செய்த கரும பலன் தொலைய
நன்னெறி வழுவாத உன்னடியார் பணி செய்தேன்
புன்னகை முகத்தாளே மூவலகும் காப்பவளே
சின்னஞ்சிறியேனை ஆண்டருள வேண்டுமென