ஆதரவு நீயே.........
பல்லவி
ஆதரவு நீயே அம்மா ஶ்ரீ சாமுண்டீஸ்வரி
வேதனை தீர்த்தருள்வாய் என்றுன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
வேதசாஸ்த்திர இதிகாச புராணங்கள் போற்றும்
நாத வடிவினளே கேசவன் சோதரி ஆதிபராசக்தி
சரணம்
தேவரும் அசுரரும் பூதகணங்களும் தேவேந்திரனும்
மூவரும் முனிவரும் சனகாதியரும் எண்திசை பாலரும்
தேவியர் கலைமகள் அலைமகள் மலைமகள் கன்னியரெழுவரும்
யாவரும் துதித்திடும் அம்பிகையே மகாதிரிபுரசுந்தரி
ராகம்: லதாங்கி
தாளம்:சங்கீர்ண ரூபகம்