காமாட்சி
பல்லவி
காமாட்சி உன்னையே துதித்தேன்
காமகோட்டம்தனில் வீற்றிருப்பவளே
அனுபல்லவி
தாமரை மலர்க்கரத்தில் பாசங்குசமும்
கரும்பும் ஏந்தும் கேசவன் சோதரி
சரணம்
சாமகானம் தனில் மயங்கிடும் ஈச்வரி
பூமிநாதன் ஶ்ரீ ஏகாம்ரேச்வரனும்
நாமகளும் பூமகளும் நரர்சுரரும் நான்முகனும்
மாமறைகளும் போற்றும் ஏகாம்ரேச்வரி