பெண்டாட்டி பிள்ளைகளை பெற்றோரை எல்லாம்
திண்டாடும் வண்ணம் தெருவில் விட்டு விட்டு
கண்மூடித்தனமாக காவிகளை நாடும் அப்
பாவிகளை என் சொல்வாய் என் செல்லக் கிளியே!
காலமெல்லாம் பாடுபட்டுக் காசுபணம் சேர்த்து
கால்வயிறும் அரைவயிறும் கஞ்சிதனைக்குடித்துவிட்டு
பணத்தை எண்ணி எண்ணி காலத்தை ஓட்டுமவர்
மூடரென்றறியாரடி என் செல்லக்கிளியே!
பசியென்று கேட்கும் ஏழைக்கு கொடுக்காமல்
அசைவின்றி நிற்கும் கல்லுக்குப் படைப்பார்கள்
திசையின்றி திரியுமவர் ஏதும் அறியாரடி
இசைபாடித்திரியும் என் செல்லக்கிளியே!